உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் செவ்வாய், பிரதோஷம்; அம்மனை வழிபட தோஷங்கள் விலகும்; சந்தோஷம் கிட்டும்!

ஆடி முதல் செவ்வாய், பிரதோஷம்; அம்மனை வழிபட தோஷங்கள் விலகும்; சந்தோஷம் கிட்டும்!

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில்   அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக்  கோர்த்து  அம்மனுக்கு அலங்காரம் செய்வர். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக  வழங்குவர். இதனால்  சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு  விரைவில் திருமணம் கைகூடும்  மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும்.


பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடி செவ்வாய் கிழமையில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அதன் பின், பூஜை நடக்கும் அன்று உப்பில்லாமல் அரிசிமாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறு நாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம். இந்த பூஜையை கடைப் பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், நல்ல கணவன், குழந்தைகள் வாய்க்கும் என்பர்.


பிரதோஷமான இன்று சிவனை வழிபட சிறப்பான வாழ்வு அமையும். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும். அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள். இந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது. இன்று அம்மன், சிவன், முருகனை வழிபடுங்க.. அனைத்தும் நலமாகும்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !