செஞ்சி சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :80 days ago
செஞ்சி; சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பால் மற்றும் விசேஷ அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கலும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.