உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் அனைத்து சமுதாய நந்தவனத்தில் பொதுமக்கள் ஆடி அமாவாசை முன்னிட்டு திதி கொடுத்து, பவானி ஆற்றில் இறங்கி வழிபட்டனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வந்திருந்தனர்.  அமாவாசை முன்னிட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழானை முன்னிட்டு,  பொது மக்களுக்காக காலை முதல் மாலை வரை உணவுகள் மற்றும் குடிநீர் டி பி பி பி பிஸ்கட் உள்ளிட்டவை  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாலை வரை அன்னதானம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் என் எஸ் வி ஆறுமுகம் துணைத் தலைவர் காளியப்ப கவுண்டர் செயலாளர் சுகுமார் பொருளாளர் குமார் துணை செயலாளர்கள் அனுமந்த ராவ் , உதயகுமார் இணை செயலாளர் பத்திரன் சட்ட ஆலோசகர் சாந்த மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !