உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை; சிறப்பு அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் அருள்பாலிப்பு

ஆடி அமாவாசை; சிறப்பு அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் அருள்பாலிப்பு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் (உற்சவர்) ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்திருந்தனர். உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !