உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகர செவ்வாய் மஹோற்சவத்தில் துள்ளி ஆடிய தெய்யம்: துர்கா பகவதி கோவிலில் பரவசம்

மகர செவ்வாய் மஹோற்சவத்தில் துள்ளி ஆடிய தெய்யம்: துர்கா பகவதி கோவிலில் பரவசம்

பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் கவர்ந்தது.


பந்தளூர் அருகே எருமாடு குதிரம்பம் பகுதியில் ஸ்ரீ துர்கா பகவதி ஆலயம் உள்ளது. இதன் மகர செவ்வாய் திற மஹோற்சவம், கடந்த 20-ம் தேதி காலை நடை திறப்பு, மகா கணபதி ஹோமம், நிர்மால்ம தரிசனம், அபிஷேகம், மலர் நிவேதிய பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கரியாத்தான் வெள்ளாட்டு திறா, துர்க்கையம்மன் வெள்ளாட்டு திறா பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூ மூடல் மற்றும் மதிய பூஜை நடத்தப்பட்டது. அன்னதானம், பகவதி வெள்ளாட்டு, நடைதிறப்பு தீபாராதனை, பகவதி சேவை மற்றும் குளியன்., வெள்ளாட்டு திறா நடந்தது. தொடர்ந்து குருஸி, மற்றும் இன்று காலை மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், கேரளாவில் புகழ்பெற்ற செண்டை மேளத்துடன் கூடிய, 5- வகையான தெய்யம் நிகழ்வு பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் பூஜைகளை ஜெயேஸ்பட், ஜெயராம் பட் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சீனிவாசன், விஜயா, சங்கீதா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !