உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு ரூ.3 கோடியே ரூ.66 லட்சம் மதிப்புள்ள வீட்டை உயில் எழுதி வைத்த பக்தர்

திருப்பதி பெருமாளுக்கு ரூ.3 கோடியே ரூ.66 லட்சம் மதிப்புள்ள வீட்டை உயில் எழுதி வைத்த பக்தர்

திருப்பதி; திருப்பதி பெருமாள் மீது அசைக்க முடியாத தனது பக்தி காட்டியுள்ளார் பக்தர் ஒருவர். தனது மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மற்றும் ரூ.66 லட்சம் மதிப்புள்ள வீட்டை தனது உயில் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க எழுதி வைத்துள்ளார்.


ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான ஹைதராபாத்தைச் சேர்ந்த  பாஸ்கர் ராவ் தனது மறைவிற்கு பிறகு  தனக்கு சொந்தமான  3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, மற்றும் வங்கியில் உள்ள 66 லட்ச ரூபாய் பணத்தை திருமலை திருப்பதிக்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார். இவர் தானமாக அளிக்கப்பட்ட அந்த 3,500 சதுர அடி பரப்பளவுள்ள "ஆனந்த நிலையம்" எனும் அந்த வீடு, ஹைதராபாத்தின் வானஸ்தலிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டை ஆன்மிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், ரூ.66 லட்சம் பணத் தொகையை அன்னபிரசாதம் உள்ளீட்ட பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பிரித்து பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரால்  நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர்கள்   சம்பந்தப்பட்ட வீட்டு ஆவணங்களையும், அறக்கட்டளைக்கான காசோலையையும்,கோவில் அதிகாரியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !