உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்

ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்

கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் தரும் ஜெயமாரியம்மன், புவனேஸ்வரி  அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு காமராஜர் நகர் சக்தி விநாயகர் -சித்தி விநாயகர் அருள் தரும் ஜெயமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் வளையல் காப்பு அலங்காரத்துடன் வாராகி அம்மன் கோலத்தில் ஜெய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


இதேபோல், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1-ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி  அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில் மூலவர் அம்மன் திருவாரூர் ஸ்ரீ கமலாம்பிகை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !