மானாமதுரை சோனையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா
ADDED :185 days ago
மானாமதுரை; மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா சுவாமி கோயிலில் சிவ குளத்தூர் உறவின்முறை சார்பில் நடைபெற்ற பொங்கல் பூஜை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தாயமங்கலம் ரோட்டில் இருந்து ஏராளமானோர் பூஜை பெட்டிகளை சுமந்து கோயிலை சென்றடைந்ததும் பூஜைகள் நடைபெற்றது.இரவு கலை நிகழ்ச்சிகளும்,வான வேடிக்கைகளும் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளையும் மானாமதுரை சிவகுலத்தோர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.