ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா பிரத்தியங்கிரா யாகம்
ADDED :98 days ago
சாணார்பட்டி; மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி ஆடி அமாவாசை மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மிளகாய் வத்தல் கொட்ட வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில்இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். இதையொட்டி கோசாலையில் வளர்க்கப்டும் 100க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்க கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.