சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :78 days ago
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக தவம் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி சங்கர நாராயணராக காட்சியளிக்க கூடிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடி மரத்திற்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார செய்யப்பட்ட, கொடி மரத்திற்கு மகாதீபாரதனையும் நடைபெற்றது. 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான அடித்த பசு காட்சி வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி நடைபெற உள்ளது.