உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயபுஷ்பவன நாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா

ஜெயபுஷ்பவன நாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் ஜெயபுஷ்பவன நாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு பால் பன்னீர், சந்தனம்,இளநீர், நெய்,குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வளையல்களால் அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.பூஜையில் ஏராளமான மகளிர்கள் கோயில் முன்பாக கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் குழந்தையில்லா தம்பதியர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !