உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு

பெண்ணாடம்,;  பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் கருட பஞ்சமியொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் கருட பஞ்சமியொட்டி, இன்று காலை மூலவர் பிரளயகாலேஸ்வரர் மற்றும் தாயார் அழகிய காதலி அம்மனுக்கு கும்ப கலசங்கள் வைத்து, 1008 சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் அரியலுார், பெரம்பலுார், கும்பகோணம், தஞ்சாவூர், பெரம்பலுார் உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !