உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டி விரதம்; சண்முகனை வணங்க சகல நன்மையும் கிடைக்கும்.. சங்கடம் நீங்கும்!

சஷ்டி விரதம்; சண்முகனை வணங்க சகல நன்மையும் கிடைக்கும்.. சங்கடம் நீங்கும்!

முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் நம்பிக்கை. ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது சகல நன்மையும் தரும். இன்று சஷ்டியில் மும்மூர்த்திகளின் அம்சமான முருகனை வழிபட்டு முன்னேற்றம் பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !