உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதியில் ஆடியில் அணிவகுக்கும் திருவிழாக்கள்..!

திருமலை திருப்பதியில் ஆடியில் அணிவகுக்கும் திருவிழாக்கள்..!

திருமலை; திருப்பதியில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன, தினமும் கோவில் திருவிழா கோலத்தில் தான் இருக்கும். அவற்றில் மிக முக்கியமானது பிரம்மோற்சவம். இது தவிர, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ரதோற்சவம் போன்றவை ஆகும். திருமலை ஸ்ரீவாரி கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் விசேஷ திருவிழாக்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 


அதன் விபரம்; மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா வர்த்தந்தி ஆகஸ்ட் 2. திருமலை ஸ்ரீவாரி பவித்ரோத்ஸவம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடக்கம். திருமலை ஸ்ரீவாரி பவித்ரோத்ஸவம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்குகிறது. திருமலை ஸ்ரீவாரி பவித்ரோத்ஸவம் ஆகஸ்ட் 7ம் தேதி நிறைவடைகிறது. ஸ்ரீ ஆளவந்தரா வர்ஷ திரு நட்சத்திரம் ஆகஸ்ட் 8. ஆகஸ்ட் 9 அன்று ஷ்ரவண பௌர்ணமி கருட சேவை.  ஆகஸ்ட் 10 அன்று ஸ்ரீ மலையப்ப சுவாமி சந்நிதியில் வெஞ்செப்பு. ஆகஸ்ட் 16 அன்று கோகுலாஷ்டமி ஆஸ்தானம். ஆகஸ்ட் 17 அன்று திருமலை ஸ்ரீவாரி சந்நிதியில் சிக்யோத்ஸவம்.  ஆகஸ்ட் 25 அன்று பலராம ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி. ஆகியவை சிறப்பு கொண்டாடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !