சின்னவடவாடி நடுகாட்டு அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :432 days ago
விருத்தாசலம்; சின்னவடவாடி நடுகாட்டு அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் நடுகாட்டு அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், மகா தீபாராதனை நடந்தது. இன்று காலை கோ பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு முடிந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.