தென்காசியில் 26ம் தேதி ஐயப்பன் மண்டல பூஜை
ADDED :4770 days ago
தென்காசி : தென்காசியில் வரும் 26ம் தேதி ஐயப்பன் மண்டல பூஜை, கன்னி பூஜை நடக்கிறது. தென்காசி ரயில்வே மேட்டு தெரு சின்னத்தம்பி மகர ஜோதி பாத யாத்திரை குழு சார்பில் வரும் 26ம் தேதி 7ம் ஆண்டு மண்டல பூஜை வழிபாடு நடக்கிறது. காலையில் மண்டல பூஜை, கன்னி பூஜை நடக்கிறது. பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு சிறப்பு பூஜை நடக்கிறது. நிகழ்ச்சியில் சபரிமலைக்கு மகரஜோதி தரிசனத்திற்கு பாத யாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் உட்பட திரளானோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை சிவா தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.