திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுந்தரர் குரு பூஜை விழா
ADDED :439 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது. இன்று காலை சண்முகர் சன்னதியில் உள்ள மூலவர்கள் விநாயகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முன்பு வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை முடிந்து அபிஷேகம் நடந்தது. கோயில் ஒதுவார்களால் ஏழாம் திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. உற்ஸவர் சுந்தரர் பல்லக்கில் கொடிக் கம்பம், நந்தியை மூன்றுமுறை வலம் சென்று உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.