ஆடி சோமவாரம்; கம்பீர விநாயகர் கோவிலில் புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :435 days ago
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.