ஆடி அனுஷம் ; காஞ்சி மகா பெரியவரின் விக்ரஹத்திற்கு சிறப்பு பூஜை
ADDED :61 days ago
கோவை; ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் சார்பில் 26-ம் ஆண்டு நாம பிரசார வைபவம் மற்றும் ஸ்ரீ மகா ருத்ர நிகழ்ச்சி கோவை இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதில் ஆடி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்ரஹத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் வேத பாராயணத்தை ஜெபித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பெரியவரின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.