மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை; பக்தர்கள் தரிசனம்
ADDED :230 days ago
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு வழிபாடு, ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 25ம் நாள் மண்டல பூஜை தினத்தை முன்னிட்டு மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் தீப ஒளியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.