ஆடித்தபசு : அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :62 days ago
போடி; ஆடித்தபசு முன்னிட்டு போடி குலாலர் பாளையம் காளியம்மன் கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனை கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். போடி சுப்பிரமணியர் கோயிலில் மீனாட்சி அம்மன், போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயில், போடி திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனின் தரிசனம் பெற்றனர்.