மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :59 days ago
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை திரு விளக்கு பூஜை நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு வரலட்சுமி அலங்காரத்தில் இருந்த உற்சவர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. பெண்களுக்கு மங்கள பொருட்களை பிரசாதமாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.