பழநியில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்
பழநி; பழநியில் ஜப்பான் பக்தர்கள் வேல், பால்குடம் எடுத்து பால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று புலிப்பாணி ஆசிரமத்திற்கு ஜப்பானிலிருந்து சிவ ஆதீனம் பாலகும்பகுருமுனி தலைமையில் வருகை புரிந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் செய்தனர். அங்கு போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள் வேல் கொடுத்து தீர்த்த யாத்திரையை துவங்கி வைத்தார். அதன் பின் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வேல் மற்றும் பால்குடம் எடுத்து சென்றனர். அங்கிருந்து கிரி வீதியில் தீர்த்தக்காவடிகளுடன் வலம் வந்தனர். மேலும் மூன்றாம் படை வீடான திருஆவினன்குடியில் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய வேஷ்டி சேலை அணிந்து வந்தனர். முருகன் கோயிலுக்கு படி வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.