உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் 354வது ஆராதனை விழா

நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் 354வது ஆராதனை விழா

கோவை; கோவை புதூரில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி  மடத்தின் கோவை புதூர் கிளையில் ஸ்ரீ ராகவேந்திரரின் 354 -வது ஆராதனை விழா கடந்த சனிக்கிழமை துவங்கியது. முதல் நாள் நிகழ்வாக காலை 7 மணிக்கு ரிக் வேத உபகரமா, சத்யநாராயண பூஜை ஆகியன நடைபெற்றன. தொடர் நிகழ்வாக கோ பூஜை, தானிய பூஜை, மந்திர புஷ்பம் ஆகியன நடைபெற்றது. மூலவர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வாக காலை 6 மணியளவில் சுவாமி நிர்மால்யதரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு பஞ்சாமிர பஞ்சாமிர்த , அபிஷேகம் கனகாபிஷேகம் ஆகியன நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவைப்புதூர் நகர வீதிகளில் ரத உற்சவம், மந்திர புஷ்பம் ஆகியன நடைபெற்றன..இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு ராகவேந்திரரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !