சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம்; சிறப்பு திருமஞ்சனம்
ADDED :53 days ago
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் நடந்தது.
செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இரண்டு நாள் பவித்ரோட்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 13 ம் தேதி காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து பவித்ரமாலை அணிவித்தனர். சிறப்பு ஹோமம் நடந்தது. இன்று காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமமும் 1 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.