திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :52 days ago
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவையொட்டி கலசாபிஷேகம் நடைபெற்றது. திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், கடந்த மாதம், 2ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 5ம் தேதி முதல் 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்தன. இதன் நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் சஹஸ்ர கலச பூஜையும், பிரம்ம கலச பூஜையும் நடைபெற்றது. நேற்று அதிகாலை மகா கணபதி ஹோமம் நடந்தது. அதையடுத்து 108 வலம்புரி சங்கு அபிஷேகம், 1,008 சஹஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சபரிமலை பிரம்ம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.