மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஜப்பானியர்கள் வருகை
ADDED :52 days ago
போத்தனூர்; கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி தினத்தன்று மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து, கிரிவலம் செல்வர். நேற்று இக்கோவிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த, 60 பேர் வந்தனர். கோவில் செயல் அலுவலர் சந்தியா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அனைவரும் வேள்வி. பாராயணத்தில் பங்கேற்றனர். இதையடுத்து அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் சாப்பிட்ட பின் அனைவரும். புறப்பட்டு சென்றனர். அலுவலக உதவியாளர் ஜெயச்சந்திரன் கூறுகையில் " கடந்த இரு வாரங்களாக ஜப்பானை சேர்ந்த, 60 பேர் தமிழ்நாட்டிலுள்ள, 120 கோவில்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இக்கோவிலுக்கு மட்டுமே வந்துள்ளனர். கோவில் அமைதியான சூழலில் அமைந்துள்ளதாக கூறினர்," என்றார்.