உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீராட முடியாத நிலையில் தேவிபட்டினம் நவபாஷாணம் கடற்கரை!

நீராட முடியாத நிலையில் தேவிபட்டினம் நவபாஷாணம் கடற்கரை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணம் கோயிலில் அமைந்துள்ளது. தென்தமிழகத்தின் கடல் சூழ்ந்த பட்டினம் தேவிபட்டினம் என்னும் தேவிபுரம். ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டினான். இதைக் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷண மிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று. முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யவும், நவக்கிரக தோஷங்கள் விலக, குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவபாஷாணம் கடற்கரை அசுத்தமாக உள்ளது. அசுத்தம் கலந்த நீரில் புனித நீராட முடியாமல், நடந்து சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !