பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ரகசிய கேமரா!
ADDED :4771 days ago
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் குற்றத் தடுப்பிற்காக, ரகசிய "கேமிராக்கள் பொருத்த, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., சக்திவேல் தெரிவித்தார். காரைக்குடி, பிள்ளையார்பட்டியில் உள்ள கோயில்களில் பண்டிகை காலங்களில் பக்தர்களின் நெரிசலை பயன்படுத்தி, செயின், பணம் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த எஸ்.பி.,க்கள் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிள்ளையார் பட்டியில் சி.சி.டி.,கேமிரா பொருத்த நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளதாக எஸ்.பி., சக்திவேல் தெரிவித்தார்.