உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்

திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று 27ம் தேதி முதல் வரும் செப்., 09ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 10.00 மணிக்குள் மேல் பிரம்மாண்டமான கொழுக்கட்டை  மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ,  உச்சிவிநாயகர் சன்னதியில் 75 கிலோ  150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. 


மேலும் 2004ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.  பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி  14- தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.  மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4-00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.  மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !