தஞ்சை ஸ்ரீமகாகணபதி கோவிலில் தீர்த்தவாரி; புனித நீராடிய பக்தர்கள்
ADDED :97 days ago
தஞ்சை; தஞ்சை கணபதி அக்ரஹாரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீமஹாகணபதி கோயில் விநாயகர் சதுர்த்தி ப்ரமோத்ஸவம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீர்த்தவாரி நேற்று நடந்தது. அஸ்திரதேவருக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனத்தால் அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரிக்கப்பட்டு வீதி உலா வந்த ஸ்ரீமகாகணபதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.