சபரிமலையில் கற்பூரஆழி பூஜை!
ADDED :4753 days ago
சபரிமலை: சபரிமலையில், வரும், 26 ம் தேதி, மண்டல பூஜை நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நேற்று முன்தினம் இரவு தேவஸ்தான ஊழியர்கள் சார்பில், கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.இதையொட்டி, சன்னிதானத்தில் தீபாராதனைக்கு பின், கொடிமர மூட்டில் ஊழியர்கள் அணிவகுத்தனர். வாத்திய மேளங்கள் முழங்க, சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் என, பல வடிவங்களில் ஊழியர்கள், அலங்கரித்து வந்தனர். தொடர்ந்து கற்பூர தீபத்தை, கோவில் பூஜாரி கண்டரரு ராஜீவரரு ஏற்றினார். கற்பூர ஆழி பவனி சன்னிதானத்தையும், மாளிகைப் புறத்தம்மன் கோயிலையும் வலம் வந்த பின், 18 ம் படியருகே நிறைவு பெற்றது.