திருப்பதி திருமலையில் தங்கத் தேர் உற்சவம்!
ADDED :4702 days ago
நகரி: திருப்பதி, திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி வைபவத்தையொட்டி, தங்கரத உற்சவம் சிறப்பாக நடந்தது.ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி, தங்கத்தேரில், நேற்று காலை மாடவீதியில் வலம் வந்தார். சொர்கவாசல் தரிசனத்திற்காக, திருமலையில் குவிந்திருந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், தங்கத் தேர் உற்சவத்தில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.