உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு பல்லசேனாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு கோலாகலம்

பாலக்காடு பல்லசேனாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு கோலாகலம்

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காடு பல்லசேனாவில், போர் அழைப்பை நினைவூட் டும் வகையில், அவிட்டத் தல்லு நிகழ்ச்சி கோலாகல மாக நடந்தது.கேரள மாநிலம், ஓணம் பண்டிகையை கடந்த மூன்று நாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந் தனர். பாலக்காடு மாவட்டம் பல்லசேனாவில் அவிட்டம் நாளான இன்று, மாலை, 4:30 மணிக்கு, நாயர் சமுதாயத்தினர் நடத்திய, அவிட்டத்தல்லு என அழைக்கப்படும், முதுகில் அறையும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஊர் மன்னர் குரூர் நம்பிடியை ஏமாற்றி கொலை செய்ததால் ஆத்திரமடைந்த மக்கள், போர் அழைப்பு விடுத்ததை நினைவூட்டும் வகையில், வேட்டைக்கொருமன் கோவில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இரு அணியினர், ஒருவருக்கொருவர் முதுகில் பலமாக அறைவது தான் இந்த "அவிட்டத்தல்லு நிகழ்ச்சியின் சிறப்பு. ஒருவருக்கொருவர் அறைந்து செல்வது, உடற் பயிற்சி, குளத்தில் குளித்தல், சயனபிரதக் ஷிணம் ஆகியவற்றை காண, மாநிலத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இதேபோல், திருவோண நாளான நேற்று முன்தினம் மாலை பல்லசேனா தல்லுமன்னம் பகுதியில், இதர சமுதா யத்தினர் திருவோணத் தல்லு நிகழ்ச்சி நடத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !