மேலும் செய்திகள்
புல்வாய்க்குளம் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா
20 minutes ago
தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
20 minutes ago
அவிநாசி; சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம் நுழைவாயில் கும்பாபிஷேகம், முதலாம் ஆண்டு விழா ஆகியவை நடைபெற்றது.சேவூரில் அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் கொடிமரம் நுழைவாயில் கும்பாபிஷேகம், முதலாமாண்டு விழா ஆகியவை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் வாலீஸ்வரர் கோவிலில் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரண்டாம் காலயாக பூஜை, கலச புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நுழைவாயில் கும்பாபிஷேகம், கொடிமரம், கொடிமர விநாயகர் ஆகியவைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர்,வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கலச அபிஷேகம், திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
20 minutes ago
20 minutes ago