மேலும் செய்திகள்
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா
21 minutes ago
வரதராஜபெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச லீலை
21 minutes ago
தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
21 minutes ago
கமுதி; கமுதி அருகே புல்வாய்க்குளம் கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.புல்வாய்க்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்வாய்க்குளம் அருகே உள்ள அம்மன் கோயிலில் பிடிமண் வழங்கப்பட்டது.கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.அய்யனாருக்கு தினந்தோறும் சிறப்புபூஜை நடந்தது. தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, ராக்கச்சி,பேச்சியம்மன்,பைரவர்,சப்த கன்னிமார்கள், உள்ளிட்ட தவழும் பிள்ளைகள் கிராமமக்கள் முக்கிய விதிகளில் ஊர்வலமாக தூக்கி வந்தனர். கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் நடந்தது. பின்பு அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர்.மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விவசாயம் செழிக்கவும் பருவமழை பெய்ய வேண்டியும் இந்த குதிரை எடுப்பு விழா கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.விழாவில் கமுதி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
21 minutes ago
21 minutes ago
21 minutes ago