தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :52 days ago
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை யொட்டி புனித தலம், சுற்றுலாத் தலங்களில் ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.