உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா

மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா

செஞ்சி; மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் திரவுபதியம்மன் ஜெயந்தி விழா நடந்தது.செஞ்சி அடுத்த மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் திரவுபதியம்மனின் ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு திரவுபதியம்மனுக்கு குணசேகரன், ஜெயக்குமார் சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தி, கலசாபிஷேகம் செய்தனர் மற்றும் சிறப்பு அலக்காரம் மகா தீபாராதனை நடந்தது. சோ.குப்பம் பஜனை கோஷ்டியினரின் பஜனை நடந்தது. இந்நிகழ்சிகளுக்கு சோழர் வணிகப் படை நிறுவனர் மோகன்சாமி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., தீரன், தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஆத்மலிங்கம், அறவாழி முன்னிலை வகித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !