உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருந்தங்காடு ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவில் தீர்த்த குடம் ஊர்வலம்

குருந்தங்காடு ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவில் தீர்த்த குடம் ஊர்வலம்

அவிநாசி; அவிநாசி குருந்தங்காடு முனியப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவிநாசியில், மடத்துப்பாளையம் குருந்தங்காடு பகுதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ முனியப்ப சாமி கோவிலில் இன்று காலை 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !