உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சூலுார்; சூலுார் அடுத்த செங்கத்துறையில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த செவ்வாய்கிழமையன்று பூச்சாட்டுடன் கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. முன்னதாக முனியப்பன் பொங்கலும், கிராம சாந்தியும் நடந்தது. 8ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. பக்தர்கள் விநாயகர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.‌ நேற்று முன்தினம் மாகாளியம்மன் அழைத்து வருதலும் காப்பு கட்டுதலும் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை மாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. சிங்க வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாவிளக்கு, பூவோடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கம்பத்தாட்டம் ஆடினர். இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !