உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி; உறியடி திருவிழா

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி; உறியடி திருவிழா

திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, உறியடி திருவிழா நடந்தது.


திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட உறியடி திருவிழாவை, கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !