உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.‌23ல் நவராத்திரி உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.‌23ல் நவராத்திரி உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா செப். 23முதல் அக். 2வரை நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள் பாலிப்பார்.செப். 23ல் ராஜராஜேஸ்வரி, செப். 24ல் நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், செப். 25ல் ஊஞ்சல், செப். 26ல் பட்டாபிஷேகம், செப். 27ல் திருக்கல்யாணம், செப். 28ல் தபசுக் காட்சி, செப். 29ல் மகிஷாசுரவர்த்தினி, செப். 30ல் சிவபூஜை, அக். 1ல் சரஸ்வதி பூஜை, அக். 2ல் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !