பாலமலை ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :119 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி குழந்தை வடிவிலான கிருஷ்ணருக்கு தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் இடும் வைபோகம் நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உற்சவமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உறியடி திருவிழாவும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து இருந்தார்.