காளஹஸ்தி கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி கோயிலில் வரும் 22ம் தேதி திங்கட்கிழமை முதல் 01.10.2025 புதன்கிழமை வரை தேவி நவராத்திரி விழா காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள கனகாசலம் மலை மீது வீற்றிருக்கும் கனக துர்கை அம்மையாருக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தேவி நவராத்திரியின் போது, ஸ்ரீ கனக துர்கை அம்மையார் பின்வரும் அலங்காரத்தில் காட்சி தருவார்.
1) 22ம் தேதி திங்கட்கிழமை : காலை ராஜராஜேஸ்வரி தேவி அலங்காரம்
2).23.09.2025 செவ்வாய்க்கிழமை: ஸ்ரீ மீனாட்சி அம்மையார் அலங்காரம்
3) .24.09.2025 புதன்கிழமை: ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம்
4.) 25.09.2025 வியாழக்கிழமை : மஹாலக்ஷ்மி அலங்காரம்
5) .26.09.2025 வெள்ளிக்கிழமை: அன்னபூர்ணா தேவி அலங்காரம்
6) .27.09.2025 சனிக்கிழமை: காத்யாயனி தேவி அலங்காரம்
7) .28.09.2025 ஞாயிற்றுக்கிழமை : லலிதா திரிபுர சுந்தரி தேவி அலங்காரம்
8) .29.09.2025 திங்கட்கிழமை: சரஸ்வதி தேவி அலங்காரம்
9).30.09.2025 செவ்வாய்க்கிழமை : துர்காதேவி அலங்காரம்
01).10.2025 புதன்கிழமை ஸ்ரீ மகிஷாசுர மர்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் புரிவார். விழாவை முன்னிட்டு, காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ பொஜ்ஜல. சுதிர் ரெட்டி தலைமையிலான கோயில் அதிகாரிகள் தேவஸ்தான வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழா விற்கான சுவரொட்டிகளை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.