தமிழக ஓதுவா மூர்த்திகள் நலச்சங்கத்தின் சார்பில் நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா
அவிநாசி; ஓதுவாமூர்த்திகள் நலச் சங்கத்தின் சார்பில் நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும் முதலை உண்ட பாலகனை மீட்டு எடுத்த தல வரலாறு கொண்ட தலமாக விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக ஓதுவாமூர்த்திகள் நல சங்கத்தின் சார்பில் நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா நடைபெற்றது. இதில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட, என்றும் முட்டா பாடும் அடியார்களான ஓதுவாமூர்த்திகள் பங்கேற்ற திருமுறை பாடி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமுறைகண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், 63 நாயன்மார்கள் அலங்காரம்,பேரொளி வழிபாடு, அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரருக்கு உசித கால திருமஞ்சனம்,உலகம் நலம் பெற வேண்டி திருப்பதிகங்களை ஓதுவாமூர்த்திகள் விண்ணப்பித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.