திருமலையில் பிரம்மாண்ட பிரம்மோற்சவ விழா; ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி; திருமலையில் வருகின்றன 24 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது,இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
விழா நாட்களில் தினமும் 1.16 லட்சம் சிறப்பு தர்ஷன் டிக்கெட் வழங்கப்படும்,விஐபி தர்ஷன் கிடையாது, 36 பெரிய திரைகள் மூலம் வாகன சேவைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்,8 லட்சம் லட்டு தினசரி விநியோகிக்கப்படும்,கருட சேவையின் போது 14 வகை உணவுகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சி பக்தர்களின் வரவேற்பை பெற்றதாகும், இந்த வருடம் 3.5 கோடி ரூபாய் செலவில் 60 டன் மலர்கள் கொண்டு கண்காட்சி நடத்தப்படும். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் கோவில் ஊழியர்களும்,4 ஆயிரத்து700 போலீசாரும், 3ஆயிரத்து 500 தொண்டர்களும் ஈடுபடுவர். மேலும் 3ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பு பணியில் செயல்படும். 28 மாநிலங்களிலிருந்து 298 கலாச்சார குழுக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தும்,கருட சேவையின் போது 37 புதிய குழுக்கள் இதில் இணையும். பக்தர்களுக்கு திருப்தியும் சந்தோஷம் தரும்வகையில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.