திருப்பதி பிரம்மோற்சவம்; சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி உலா
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். திருமலை – திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி பிரம்மோற்சவம் இந்தாண்டு செப்., 24ம் தேதி துவங்கி அக்., 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில்,நாள்தோறும் விதவிதமான வாகன உலா நடைபெற உள்ளது. இன்று மூன்றாம் நாள் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி வீதி உலாவில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். விழாவில் திருமலை ஸ்ரீ பெறிய ஜீயர்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயர்சுவாமி, தேவஸ்தான அதிகாரி அனில் குமார் சிங்கால், பல வாரிய உறுப்பினர்கள், முரளி கிருஷ்ணா மற்றும் பலர் வாகன சேவையில் பங்கேற்றனர்.