உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்

செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் செய்து திருப்பாவாடை உற்சவமும், சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாத வினியோகம் நடந்தது. வெங்கட்ரமணர்; இதேபோல் செஞ்சி பீரங்கி மேடு அருணாசலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாளுக்கும், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணனருக்கும், வீர ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !