உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவருக்கு சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி

ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவருக்கு சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை சங்கர மடத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மிணி மூலவருக்கு இன்று (28ம் தேதி) சஹஸ்ரநாம பாராயணத்துடன் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது.புதுச்சேரி அடுத்த இரும்பை அருகே அமையவுள்ள ஸ்ரீ விட்டல் சேவா ட்ரஸ்டின், ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீபக்த கோலாகல பாண்டுரங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்காக, பண்டரிபுர சந்திரபாகா நதிக்கரையில் இருந்து, பிரம்ம ஸ்ரீவிட்டல்தாஸ் மகாராஜ் மூலம், ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு, புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது.நேற்று மக்களின் பார்வைக்காக, ரத உற்சவம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, அண்ணா சாலை, நேரு வீதி, அம்பலத்தாடையர் மடத்து வீதி, காமராஜர் சாலை வழியாக சென்று, நவீனா கார்டன் அருகில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவிலில், முடிவடைந்தது.இன்று (28 ம் தேதி) முதல், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், சங்கர மடத்து வீட்டில், பொதுமக்கள் தரிசனத்திற்காக, மூலவர்கள் வைக்கப்படுகிறது. தினமும் சஹஸ்ரநாம, பாராயணத்துடன் மூலவருக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.வரும் 5ம் தேதி, காலை 9:00 மணியில் முதல் இ.சி.ஆர்., சிவாஜி சிலை அருகில் உள்ள கே.பி.எஸ். ஸ்ரீ கன்வென்ஷன் சென்டரில் மூலவர்கள் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு, சகஸ்ரநாம பாராயணம், புஷ்பாஞ்சலி மற்றும் ஆராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகாராஜின், நாமசாகர் (நாம சங்கீர்த்தனம் , உபன்யாசம் ) நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு, வரும் பொதுமக்களுக்கு அனுமதி இலவமாக வழங்கப்படுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !