உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை கோவிலில் திருக்கல்யாண உத்சவம்

வல்லக்கோட்டை கோவிலில் திருக்கல்யாண உத்சவம்

ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முரு கன் கோவிலில், திருக்கல் யாண உத்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். திருமண பிரார்த்தனை ஸ்தலமாக இக்கோவில் விளங்குவதால், ஒவ்வொரு மாதமும், திருக்கல்யாண உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உத்சவம் நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு, வசந்த மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மயில் மண்டபத்தில் எழுந்தருளி, தலைமை அர்ச்சகர் சந்தி ரசேகர குருக்கள் தலைமையில் 11:00 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யதாரணம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். திருக்கல்யாண உற்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு திருக் கல்யாண உத்சவ வைபவம் நடந்தது. சிவாச்சாரியார்கள் ராதா, ருக்மணிக்கு, கிருஷ்ணர் சார்பாக மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு 11:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !